சென்னை: ஃபெஞ்சல் புயல் ஒரு வழியாக முழுமைாயக நிலப் பகுதிக்குள் சென்று விட்டது. என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் செம கெத்து காட்டிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கூட சரியாக கணிக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது அது தனது இயல்பையும், நகர்வையும் மாற்றிக் கொண்டே வந்தது. ஒரு வழியாக நேற்று புதுச்சேரி அருகே அது கரையைக் கடந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இருப்பினும் ஃபெஞ்சல் புயல் முழுமையாக கடக்கவில்லை. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க நேரம் பிடிக்கும். அது நகராமல் அப்படியே உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் கிட்டத்தட்ட அதே கருத்தை வைத்திருந்தார். காலையில் இதுதொடர்பாக அவர் போட்ட பதிவில், ஃபெஞ்சல் புயல் இன்னும் கடலில்தான் உள்ளது. அதன் 20 சதவீத பகுதிதான் கரையைக் கடந்துள்ளது. முழுமையாக அது இன்னும் கரையைக் கடக்கவில்லை. செயற்கைக் கோள் படங்களைப் பார்த்தாலே அது தெரியும். இன்று பிற்பகல் முதல் மாலைக்குள்ளாக அது கரையைக் கடக்கும்.
புயல் அப்படியே நிலை கொண்டிருப்பதால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். இன்று மாலை வரை புயல் நகர வாய்ப்பில்லை.
சென்னையிலும் கூட இன்று அவ்வப்போது மழை பெய்யும். சில நேரங்களில் அடர்த்தியான மழையையும் காணலாம் என்று கூறியிருந்தார் பிரதீப் ஜான். இந்த நிலையில் தற்போது முழுமையாக நிலப் பகுதிக்குள் ஃபெஞ்சல் புயல் போய் விட்டதாக தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்
பெங்களூருக்கு மழை இருக்கு
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் பதவில் கூறியிருப்பதாவது: ஒரு வழியாக ஃபெஞ்சல் புயல் நிலப் பகுதிக்குள் போய் விட்டது. விழுப்புரத்திற்கு மேலாக அடர்த்தியான மேகக் கூட்டம் திரண்டிருக்கிறது. புயலுக்கு தென் மேற்குப் பகுதியில் திரண்டிருக்கும் மேகக் கூட்டம் இது. இது அடுத்து மேற்கு நோக்கி நகரும். அதாவது புயல் மேற்குப் பகுதியில் நகரும்போது இந்த மேகக் கூட்டமும் அதே திசையில் நகரும்.
மேற்கு - வட மேற்கில் இது தொடர்ந்து நகரும். அதாவது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், ஈரோடு, மைசூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவையிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரிக்கும் மழை உண்டு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் திடீர் திடீரென அடர்த்தியான அவ்வப்போது இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ப வடிவில் பிள்ளைகளை உட்கார வைத்தால்.. கழுத்து வலிக்காதா.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
ப வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!
ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு
விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!
சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!
ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து
{{comments.comment}}