சென்னை: அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 2,229 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் வடகடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் இன்றும் நாளையும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி
இன்று செங்கல்பட்டு விழுப்புரம் மயிலாடுதுறை கடலூர் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். குறிப்பாக அதிக கனமழை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,கடலூர், மாவட்டங்களில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திருவாரூர், நாகை, மாவட்டங்களில் உள்ள ஆறு முகாம்களில் 471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மிக கனமழை விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
{{comments.comment}}