புயல் முழுமையாக நீங்க டிசம்பர் 5 வரை ஆகும்.. அதுவரை மழை இருக்கும்.. வானிலை ஆர்வலர் செல்வகுமார்

Nov 30, 2024,03:55 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் முற்றிலுமாக நீங்க நாலாம் தேதி , ஐந்தாம் தேதி ஆகிவிடும். அதுவரைக்கும் மழை இருக்கும். சென்னையில் இன்று மாலை இரவு நள்ளிரவு அதிகாலை என உச்சபட்சமாக அதி கன மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடகடலோர மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும்.. எங்கு கரையை கடக்கும்.. அது எங்கெங்கெல்லாம் மழையை கொடுக்கும்.. அது எவ்வாறு செயல்படும்.. என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் துல்லியமான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 


அவரது கூற்று:




வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் எதிர்பார்த்ததை விட  சற்று தீவிரமடைந்துள்ளது. 125 கிலோமீட்டர் வரை கூட தீவிரமடையலாம்.  தற்போது 110 கிலோமீட்டர் வரையில் தீவிரமடைந்துள்ளது. இந்த நிகழ்வு தற்போது சென்னைக்கு 130 கிலோ மீட்டர் தொலைவில் நீடித்துக் கொண்டுள்ளது. இது 130 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும்  கரையை கடப்பதற்கு இது இன்னும் 30 மணி நேரம் மேல் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 130 கிலோ மீட்டரை நெருங்குவதற்கு இன்னும் 30 மணி நேரம் ஆகும். 


சற்றே யோசிக்க வேண்டும். இந்த புயல் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேலையில் தற்போது இந்த புயல் வடக்கு நோக்கி சற்று நகர்ந்து கொண்டு வருகிறது. வடக்கு நோக்கி நகர்ந்தாலும் எதிர்பார்த்தப்படியே சென்னை நெருக்கமாக நகர்வது மாலை என்று எதிர்பார்த்தோம். தற்போது முன் இரவாக எதிர்பார்க்கிறோம்.


ஆக சென்னையில் இன்று முன்னிரவு நள்ளிரவு கனமழை உச்சகட்டமாக இருக்கும். பிறகு இந்த புயல் செங்கல்பட்டு மாவட்டத்தை நோக்கி திரும்பி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டம் இடைப்பட்ட எண்ணூர் பகுதியில் உள்ள மரக்காணம் மாமல்லபுரம் இடைப்பட்ட கூவத்தூர் பகுதிகளில் மரக்காணத்திற்கு மிக அருகிலேயே கரையை கடக்கும். 


இதனால் மரக்காணத்தின் வடக்கேயும் தெற்கேயும் காற்று சற்று அதிகம் இருக்கும். திருவள்ளூர்  முதல் புதுச்சேரி வரைக்கும், கடலூர் மாவட்டத்தின் தலைநகரப் பகுதி வரைக்கும் காற்றோட வேகம் அதிகரிக்கும். சென்னையில் நேற்று இரவில் பெய்த மழை சுமார் ஒரு மணி நேரத்தில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு அரை சென்டிமீட்டர் பெய்து இருக்கிறது. சராசரியாக மணிக்கு முக்கால் சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 


காலை நிலவரப்படி சென்னையில் 5 மணி நேரத்தில் 10 cm மழை பெய்துள்ளது. ஒரு மணி நேரத்தில் இரண்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை இன்னும் படிப்படியாக அதிகரிக்கும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி மழை அதிகரிக்கும் போது இன்று மதியம் கன மழையாக மாறும். ஒரு மணி நேரத்திற்கு மூன்று சென்டிமீட்டர் அளவு மழை பெய்யும். மாலை ஒரு மணி நேரத்திற்கு நான்கு சென்டிமீட்டர் ஆக மாறும். இரவிலே ஒரு மணி நேரத்திற்கு 5 சென்டிமீட்டர் ஆக மாறும். நாளை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை காலையில் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தை நோக்கி நகர்வதால் சென்னையில் மழையின் தீவிரம் குறைவதோடு தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டுதான் இருக்கும். சென்னையில் உச்சபட்ச மழையாக அதிகன மழையாக இன்று மாலை இரவு நள்ளிரவு அதிகாலையில்  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை திருவள்ளூருக்கும், காஞ்சிபுரம் செங்கல்பட்டுக்கும் , ராணிப்பேட்டை திருவண்ணாமலை வரைக்கும் மழை பெய்யும். காற்றைப் பொறுத்தவரை சென்னைக்கு 75 கிலோமீட்டர் தொலைவில் இன்று வரை மாலைக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இரவிலே வரும். அந்த சமயத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் 85 டூ 95 கிலோ மீட்டர் வேகத்தில் விட்டுவிட்டு வீச கூடும்.


தரைக்காற்று கடல் நோக்கி போகும்‌. செங்கல்பட்டிலும் விழுப்புரத்திலும் புதுச்சேரியிலும் 75 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று  தரையை நோக்கி வீசும். புயல் கரையைக் கடக்கும் இடத்திற்கு மிக நெருக்கமாக நாளை அதிகாலை வந்தாலும் உடனடியாக அது கரை கடந்து விடாது. பகல் முழுவதும் செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டத்திற்கு கிழக்கே மாமல்லபுரத்திற்கு கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் நீடித்துக் கொண்டிருக்கும். 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் இடைப்பட்ட தொலைவிலேயே நீடித்துக் கொண்டிருக்கும். அப்போது வெளிச்சுற்றில் பாதி சுற்று அந்த புயலின் சக்கரம் செங்கல்பட்டு மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும், விழுந்து கொண்டிருக்கும். காற்று பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். ஆக மழைப்பொழிவும் காற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும், சென்னையிலும் திருவள்ளூரில் இருந்தாலும் அதிகாலை வரை தான் இந்த தீவிரம் இருக்கும். அதன் பிறகு செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, இரவு கடலூர் வடக்கு பகுதி பண்ருட்டி, மேல்மருவத்தூர், உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் காற்று இருக்கும். 


டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை 6, 7 மணிக்கு தான் கரையை கடக்கும் போல் தெரிகிறது. முழுமையாக கரை கடப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை இரவாகிவிடும். இதனால் முழுமையாக கரையை நெருங்கும் போது  சென்னையில் தீவிரம் குறைந்து இரு காற்று இணைவு தெற்கு மேற்கே இணையும். சென்னையில் காற்றும் மழையும் ஏற்படுத்தும் பாதிப்பை விட விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரிக்கு மழை பாதிப்பு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடக்கே ஒப்பிடும்போது தெற்கில் அந்த அளவிற்கு மழைப்பொழிவு இருக்காது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, செட்டியார் தோப்பு, விருதாச்சலம், விக்ரவாண்டியில் மழைப்பொழிவு இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மழைப்பொழிவு அதிகரிக்கும். புயல் கரையைக் கடந்து நாளை மறுதினம் அதாவது திங்கட்கிழமை இரண்டாம் தேதி தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரும். அப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும். பிறகு கொல்லிமலை கல்வராயன் மலையை தாண்டி நாமக்கல் மாவட்டத்திற்கு வரும்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, மைசூர், போன்ற பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.


இதைத்தொடர்ந்து திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டத்திற்கு டிசம்பர் மூன்றாம் தேதி தான் வரும். அப்போது திண்டுக்கல்,திருப்பூர், தெற்கு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.  இந்த மழை கர்நாடாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழையை கொடுத்து அணைகள் நிரம்பும். இதனால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்