டெல்லி: ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என காங்கிரஸ் எம்.பி.,யான ராகுல் காந்தி தமிழக மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ம் தேதி இரவு கரையை கடந்த நிலையில், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் இந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தந்தளித்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தங்கள் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

மழையினால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அது மட்டுமின்றி திருவண்ணாமலையில் பெய்த கனமழையினால் தீப மலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், மலை அடிவாரத்தில் இருக்கும் வஉசி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாறைகள் விழுந்ததில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தியது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரமான ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மனமுடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்களை நினைத்து கவலையைடகிறேன். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}