சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வண்டலூர் உயிரியல் பூங்காவும் நாளை மூடப்பட்டிருக்கும்.
புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்படும். இன்று இரவு முதலே சென்னையில் கடற்கரைச் சாலைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. நாளை தேவையில்லாமல் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது புயலானது வேகம் எடுத்து மணிக்கு 15 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது.
8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
இதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நாளை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்துமாறும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும்போது அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பூங்காக்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}