6 மாவட்டங்களில் அதி கன மழை.. 4 மாவட்டங்களில் மிக கன மழை.. நாளை.. வானிலை மையம் தகவல்

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் அதிக கன மழைக்கும்,4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றுவரை பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே பகுதியில் நீடித்ததால் புயல் உருவாவதில் தாமதமானது. இதனால் மழையின் தீவிரம் சற்று குறைந்து பலத்த காற்று வீசி வருகிறது. 


இந்த நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 


இன்று கனமழை: 




செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை அதிக கன மழை (ரெட் அலர்ட்): 


செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், ஆகிய 6 மாவட்டங்களில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நாளை மிக கனமழை: 


நாளை திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நவம்பர் 30-ல் அதிக கன மழை (ரெட் அலர்ட்):


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் நவம்பர் 30ஆம் தேதி அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நவம்பர் 30 மிக கனமழை: 


ராணிப்பேட்டை திருவண்ணாமலை அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகை ஆகிய எட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் 30ஆம் தேதி கனமழை: 


வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் திருச்சி புதுக்கோட்டை கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்