சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற பிறகு நவம்பர் 30ஆம் தேதி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்படவுள்ளது. இதன் காரணமாக இன்று நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புயல் எங்கு எப்போது கரையை கடக்கும் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் எப்போது எங்கு கரையை கடக்கும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி..
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, பிறகு நவம்பர் 30 ஆம் தேதியன்று பரங்கிப்பேட்டை மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும்.
நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். சென்னைக்கு தெற்கே புயல் கடந்து செல்வதால் சென்னைக்கு என்னெல்லாம் சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.
- வடக்கு நோக்கி நகரும்போது, சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
- சென்னையில் 28-ம் தேதி அதாவது நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- 29ம் தேதி மேற்கு நோக்கி புயல் சின்னம் நகரும்.. அப்போது மிக கனமழை பெய்யும்.
- 30ம் தேதி புயல் கரையைக் கடக்கும் நாளில். சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
- சென்னையில் புயல் கரையை கடந்த பின்னர் டிசம்பர் 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் சென்னையில் மிதமான மழை பெய்யும். புயல் சென்னைக்குக் கீழே கடப்பதால் மழைப்பொழிவு அதிகமாகவே இருக்கும்.
- புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலப்பரப்பை கடந்ததும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலம் ஆகியவற்றில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}