சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழை தொடங்கி, 30ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் தற்போது பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேசமயம் சென்னையை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக உயரத்துடன் கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. 30 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடகடலோர மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி அதிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் இன்று பகலில் குளிர்ந்த காற்று வீசும். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவும் .பிறகு மாலை அல்லது இரவு முதல் டெல்டா முதல் சென்னை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் கனமழையாக தொடங்கி, 30 ஆம் தேதி தீவிர மழையாக பெய்யக்கூடும். அதேசமயம் புதுச்சேரி, மற்றும் கடலூர், விழுப்புரம், ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.
புயல் கரையை கடந்த பிறகு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி: தொடரும் தீவிர சிகிச்சை
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
{{comments.comment}}