புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?

Nov 26, 2024,07:01 PM IST

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும். புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, நாளை வங்கக்கடலில் உருவாகும் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும்.



நாளை புயலாக வலுப்பெற்று, 29ம் தேதி வரை புயலானது 150 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு இணையாக நகரும். தொடர்ந்து புயல் சின்னத்தை கண்காணிக்கிறோம். இது வடமேற்கு திசையில் கரைக்கு இணையாக நகர்கிறது. அப்போது கடலின் வெப்பநிலை 28 டிகிரியில் இருந்தால் சாதகமான நிலை ஏற்படும். புயல் சின்னத்தின் கீழே குவிதல், மேலே விரிதல் அதிகமாக உள்ளது. இவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது புயல் சின்னம் வலுவடைந்துவிடும்.

காற்றின் திசையும் வேகமும் மாறும் போது மேகக் கூட்டங்கள் பிரிந்து போக வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைய சூழலில், மேகக் கூட்டங்கள் பிரிவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றன. சென்னையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் உள்ளது. மேலும், புயல் சின்னத்தின் வேக மாறுபாடு சாதகமாக உள்ளது. புயல் வலுவாக பல காரணங்கள் உள்ளது. ஆனால் புயல் எங்கு கரையை கடக்கும், எப்போது கரையை கடக்கும் என்று இதுவரை கணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்