சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி 100% ஆவின் பால் விநியோகிக்கப்படுவதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் பலத்த மழை பெய்து சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் இந்த ஆண்டு வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் வருகிறது. மேலும் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சிரமமின்றி அத்யாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது கன மழை பெய்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படக்கூடாது எனும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100% ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?
Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!
ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்
பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு
பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்