சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பறக்கும் ரயில் சேவையும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காலை 12 கிலோமீட்டர் வேகத்தில் அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் சற்று அதிகரித்து 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக பட்டினப்பாக்கம், எம் ஆர் சி நகர், மந்தவெளி, அடையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது பெய்து வரும் இந்த தொடர் கனமழையால் சென்னை அருகம்பாக்கம், எம்எம்டி காலனி மெயின் ரோட்டில் மழை நீர் ஆறு போல் ஓடுகிறது. பல பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்பதால் சாலைகளில் பெருக்கெடுக்கும் மழை நீரும் அதிகரித்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
இதனிடையே தற்போது ஃபெஞ்சல் புயல் மிரட்டி வரும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி, உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் எங்கு பள்ளம் எங்கு மேடு என்பது கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல் மெட்ரோ ரயில் இயக்கும் சுரங்கப் பகுதிக்குள் மழை நீர் தேங்குவதால் மெட்ரோ ரயில் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பறக்கும் ரயில் சேவை ரத்து:
அதேபோல் சென்னையில் பறக்கும் ரவையில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை பாதையானது கடற்கரைக்கு வெகு அருகே இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் வரை ரயில் சேவை இருக்காது என்றே தெரிகிறது.
சென்னையில் தற்போது பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் ரயில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதியம் 12:15 முதல் சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது . மேலும் பறக்கும் ரயில் சேவை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள 044-25330952, 044-25330953 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை.. நாளை காலை வரை வெளியே வர வேண்டாம்:
அதிக கன மழை பெய்யும் மாவட்டங்களில் தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் அதிக கன மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பத்தாயிரம் பேர் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 25 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் உள்ளனர். சென்னையில் இன்று இரவு பலத்த காற்றும் கனமழையும் இருக்கும். இதனால் நாளை காலை வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}