இன்னும் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கிறது மிச்ஜாங் புயல் : வானிலை மையம்

Dec 05, 2023,02:43 PM IST
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்ஜாங் புயல் அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவத்துள்ளது.

சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி மிச்ஜாம் புயலாக மாறியது. மிச்ஜாம் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்த பேய் மழையால் கடந்த 2 நாட்களாக சென்னை வாசிகள் தவித்து வந்தனர். இந்த புயல் இன்று ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்தது.

 இந்நிலையில், 12 கிலோமீட்டர் வேகத்தில் காலையிலிருந்து புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா காவாலியில் இருந்து 40 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிச்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  நெல்லூர், பாபட்லாவில் கனத்த மழை பெய்தது. 



ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் மிச்ஜாங்ம் புயல் இன்று பிற்பகல் ஆந்திராவின் பாபட்லாவில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்