சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலானது, 24 மணி நேரம் வரை புயலாகவே நீடிக்கும் என்றும், அதன் பிறகு இது வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மலேசியா அருகே, மலாக்கா நீரிணைப் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயலானது, தோராயமாக வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 614 கடல் மைல் தொலைவில் அமைந்திருந்தது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் 07 நாட்டிகல் மைல் என்ற வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல இலங்கையின் கொழும்புக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 200 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தப் புயலானது 24 மணி நேரம் புயலாக நீடிக்கும் என்றும் அதன் பிறகு வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}