- சிவ.ஆ. மலர்விழி ராஜா
மார்கழி திங்கள் பிறந்ததம்மா....
மாதவன் வருகின்ற
நேரமம்மா.......
மாலவன் திருவடி
பாருமம்மா......
விடிவெள்ளி
வானில் வருமுன்னே.....
விரும்பிய நாயகன்
கரம் பற்ற.....
கனவும் நனவாகிட
துயில் களைந்து......
ஆதவன்
வருமுன்னே
நீராடி நீறிட்டு.......
வாசலில்
மாக்கோலம்
மனதினிலே
மங்கையிவள் மணக்கோலம்.......

குத்து விளக்கேற்றி
குலதெய்வமதை
அழைத்து
மலர்ச்சரங்கள்
மாலையிட்டு.......
மஞ்சள் குங்குமம்
மணக்க.....
மல்லிகை பூ கணக்க
கூந்தலில்
அள்ளி முடிக்க...
தேவர்கள்
வாழ்த்துரைக்க......
மார்கழியில் மதுர
கீதம் பாடி......
நலம் தரும் நாரணன்
நாமம் நெஞ்சினிக்க......
தெருவெல்லாம்
தெய்வீகம்......
மங்கையரின்
மகிழ்ச்சி
வெள்ளம்......

பூரண கும்பம் வைத்து
பூபாளம்
பாடிடுவோம்.....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}