மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!

Dec 16, 2025,12:34 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 25 டிசம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று  மார்கழி மாதம் பிறந்துள்ளது. மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் சைவர்கள் "தேவர் மாதம் "என்றும் அழைப்பார்கள். ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் உரிய மாதம் எனும் சிறப்புடையது. 20 25  டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 2026 ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை மார்கழி மாதம் உள்ளது.

 மார்கழி மாதம் இறைவனை வழிபடுவதற்காக ஒதுக்கப்பட்ட மாதமாகும். எனவே,இம்மாதத்தில் எவ்வித மங்கல  நிகழ்சிகளும் நடத்தப்படுவதில்லை. சுப முகூர்த்தம்,வீடு கிரகப்பிரவேசம்,வீடு குடியேறுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை.


சிறப்புகள்:



மார்கழி மாதத்தில் சூரிய பகவான் குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம். இந்த காலம் தேவர்கள்கண்விழிக்கும் அதிகாலை பொழுதாக,அதாவது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாகும். அவர்கள் கண்விழிக்கும் நேரத்தில் நாம்  அதிகாலை எழுந்து குளித்து, இறைவழிபாட்டில் ஈடுபடுவதனால் நாம் என்ன வேண்டுதல் வைத்திருந்தாலும் அது அப்படியே நிறைவேறும்என்பது ஐதீகம்.


அறிவில் ரீதியாக மார்கழி மாதத்தில் ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் ஆகும்.  இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து,வீட்டின் வாசலை சுத்தம் செய்து, கோலமிட்டு, அந்த கோலத்தின் மீது அழகாய் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பரங்கிப் பூக்களை வைத்து அழகு படுத்துவது வழக்கம். இவ்வாறு அழகான கோலத்தைப் பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் சென்று குடியேறுவாள் என்பது ஐதீகம்.  வாசலில் தீபமேற்றி வழிபடுவார்கள். பின்னர் பூஜை அறையில் தீபம் ஏற்றி, அருகில் உள்ள ஆலயங்களுக்கு செல்வது சிறப்பு. ஆண்கள் பஜனைக்கு செல்வது வழக்கம். இந்நேரத்தில் இறை நாமங்களை ஒரு முறை ஜெபிப்பது மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை நாம் கூறுவதற்கு  சமமாக கருதப்படுகிறது .


தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுது.ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவு பொழுது. இதில் பகல் பொழுதை "உத்தராயணம் "என்றும் இரவு பொழுதை "தட்சிணாயணம்" என்றும் அழைப்பார்கள். எனவே உத்தராயன காலமாக இருக்கும் மார்கழி மாதம் தேவலோகத்தின் விடியற்காலமாகும். எனவே, இந்த நேரத்தில் இறைவழிபாடு செய்வது அதீத சிறப்பு வாய்ந்தது ஆகும்.


பிரம்ம முகூர்த்த காலத்தில் அனைத்து கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்து கூட்டு பஜனை உடன் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.


மார்கழி மாதம் சிறப்பான நாட்கள் மற்றும் பண்டிகைகள்:


மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டிற்கு உரியதாக இருப்பினும், பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. பகவத்கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளதை நாம் அனைவரும் நினைவில் கொள்வோமாக.


மார்கழி மாத விசேஷங்கள் பற்றி பார்ப்போமா..


டிசம்பர் 19 -மார்கழி 4-  அனுமன் ஜெயந்தி.

 டிசம்பர் 30 -மார்கழி 15- வைகுண்ட ஏகாதசி. 

2026: ஜனவரி 1- மார்கழி 17 ஆங்கில புது வருடம்.

ஜனவரி 3 -மார்கழி 19- ஆருத்ரா தரிசனம்.

ஜனவரி 14 -மார்கழி 30- போகி பண்டிகை.


மார்கழி மாதம் இந்துக்களுக்கு மட்டுமின்றி கிறிஸ்தவர்களுக்கும் டிசம்பர் 25 -மார்கழி 10- கிறிஸ்துமஸ் பண்டிகை. மார்கழி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை.


மார்கழி மாத விரத நாட்கள்:


டிசம்பர் 19- மார்கழி 4- அமாவாசை.

ஜனவரி0 3: (20 26)  மார்கழி 19-  பௌர்ணமி.

டிசம்பர் 31 -மார்கழி 16- கிருத்திகை விரதம்.

டிசம்பர் 23 -மார்கழி 08- திருவோண விரதம்.

டிசம்பர் 25 -மார்கழி 10,  ஜனவரி 09(2026)-  மார்கழி 25 -சஷ்டி விரதம்.

டிசம்பர் 30 -மார்கழி 15,  ஜனவரி 14( 2026) மார்கழி 30- ஏகாதசி விரதம்.

மார்கழி 10, மார்கழி 25- சஷ்டி விரதம்.

மார்கழி 22 -சங்கடஹர சதுர்த்தி விரதம்.

மார்கழி 2,மார்கழி 17- பிரதோஷம்.

மார்கழி  09 -சதுர்த்தி விரதம்.

மார்கழி மாதம் 20 25 வாஸ்து நாட்கள் இல்லை.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.  எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

news

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

news

தேடல்!

news

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

அதிகம் பார்க்கும் செய்திகள்