நூற்றுக்கணக்கானோர் இணைந்து ஆடிய நடனம்.. குழந்தைகள் மயக்கம்.. மன்னிப்பு கேட்ட பிரபுதேவா!

May 02, 2024,05:00 PM IST
சென்னை: நடிகர் பிரபுதேவாவுக்காக ஏற்பாடு செய்திருந்த நடன நிகழ்ச்சியின்போது நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் பிரபுதேவா வீடியோ கால் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பி.எக்ஸ் ராக்ஸ் அமைப்பினர் சார்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரபுதேவாவின்  பாடல்களை அர்ப்பணிக்கும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபுதேவா நடித்த 100 பாடல்களை தொடர்ந்து 100 நிமிடங்களுக்கு நடனமாடும் உலக சாதனையாக இந்த நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை ஆறு மணிக்கு தொடங்கி 7:30 மணியளவில் நடத்தி முடிக்கப்படும் என அறிவித்திருந்தனர். 



நடிகர் பிரபுதேவா இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டு நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியது. ஆனால் கடைசிவரை பிரபுதேவா வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுவர் சிறுமியர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று நடனமாட தொடங்கினர். இந்த நிலையில் நடன நிகழ்ச்சியில்  ஆடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வெயில் தாக்கத்தால் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து பெற்றோர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து பிரபுதேவாவுக்குத் தகவல் போனது. அவர் உடனடியாக ஒரு வீடியோ கால் மூலம் நடனமாடியவர்களிடம் பேசினார். அதில் தனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் வர முடியவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

உங்களுக்கு   சல்யூட் தான் சொல்லணும். இவ்வளவு ஹார்ட்ஒர்க் பண்ணி, டைம் கொடுத்து ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க. உங்க அன்புக்கு முதலில்  நன்றி. என்னால வர முடியல. நடனமாடிய இவர்களுடைய அம்மா அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை எப்படி மீட் பண்ணனும் என்பது கண்டிப்பா தெரியல. ஆனா கண்டிப்பா உங்கள் எல்லாரையும் மீட் பண்ண ட்ரை பண்றேன். கடைசியாக எனக்கு ஒரு பாட்டு போட்டு என்னை ரீவைண்டு பண்ணது ரொம்ப நல்லா இருந்தது. நான் பாத்துகிட்டே இருந்தேன். 

ஐ மிஸ் யூ எல்லோருக்கும் ரொம்ப நன்றி. குறிப்பா ராபர்ட் இதை எல்லாத்தையும் எடுத்து நடத்தியதற்கு ரொம்ப நன்றி. உன்னோட அன்புக்கு லவ் யூ ஆல்வேஸ். உங்க ஃபேஷன் ரொம்ப நல்லா இருக்கு. இந்த நிகழ்ச்சிக்காக வந்த எல்லா மீடியாவுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்