பை தினம் கொண்டாடலாமா.. காகிதப் பை இல்லைங்க.. கணிதப் பை!

Mar 14, 2026,02:58 PM IST
- கவிஞர் க.முருகேஸ்வரி

இன்று மார்ச் 14 தேசிய  π ( பை)தினமாகக் கொண்டாடப்படுகிறது. காகிதப் பை அல்ல. கணிதப் பை (π).

ஏன் தெரியுமா?

கணித மாறிலி pi π ன் மதிப்பு 3.14
அதாவது 3 வது மாதம் மார்ச் மாதம்.
14-தேதி என்ற‌ கணக்கில் மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது... சிலர் 1:59:26 நேரத்தில் கூட கொண்டாடுவார்கள். ஏனென்றால்  πயின் மதிப்பு 
3.1415926!

"வட்டத்தரைக் கொண்டு விட்டத்தரை‌ தாக்கின்
சட்டெனத் தோன்றும் குழி"

என்று காரி நாயனார் என்ற பழந்தமிழ் புலவர் தனது பாடலில் π யின் மதிப்பை பாடியுள்ளார்.



கிமு மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க அறிஞர் ஆர்க்கிமிடிஸ் π யின் மதிப்பிற்கு துல்லியமாக கணித முறையை உருவாக்கியதால் πயின் தந்தை என அறியப்படுகிறார்.

வட்டத்தின் சுற்றளவுக்கும் வட்டத்தின் விட்டத்திற்கும் உள்ள தொடர்பு தான்.  மாறா விகிதம் தான் பை π. சிறிய வட்டத்திலிருந்து எவ்வளவு பெரிய வட்டமாக இருந்தாலும் இந்த விகிதம் மாறாது.

இந்தக் குறியீட்டை முதன்முதலில் 1706 ல் பயன்படுத்தியவர் வெல்ஷ் கணித ஆசிரியர் வில்லியம் ஜோன்ஸ்.

1737-இல் லியோன் ஹார்ட் ஆய்லர் என்பவர் இதனைப் பிரபலப்படுத்தினார்.

கிரேக்கத்தில் வட்டத்தின் சுற்றளவை பெரிஃபெரியா(பரிதி) என்று கூறுவர்.எனவே அதன் முதல் கிரேக்க எழுத்தான π இதற்கு பயன்படுத்தப்பட்டது.

இன்று அனைத்து மொழிகளிலும் இந்த எழுத்தே பயன்பாட்டில் இருக்கிறது.

π ன்‌ மதிப்பு 

3.14159265358979323846..... என முடிவில்லாமலும் சுழல் தன்மையற்றும் செல்லும்....

எனவே Pi π ஒரு‌ மாய எண்.

உங்களுக்குத் தெரியுமா... இன்று உருளைக்கிழங்கு சிப்ஸ் தினமும் கொண்டாடப்படுகிறது. ஒருவேளை‌  உருளைக்கிழங்கு சிப்ஸ் வட்ட வடிவத்தில் இருப்பதால்  பை தினத்தனறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தினமும்  கொண்டாடப்படுகிறதோ!!!!

இருக்கட்டும்...
உருளைக் கிழங்கு சிப்ஸ் மென்று கொண்டே
π ‌ யினைக்‌ கொண்டாட
π π பை‌ பை‌ சொல்லி விடை பெறுகிறேன்.

(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Poet Vairamuthu: கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது அறிவிப்பு

news

டெல்லி புறப்பட்ட விஜய்க்கு சிக்கல்.. கத்திரிக்கோல் இருந்ததால் தரையிறக்கப்பட்டார்!

news

உண்மையான நேசம் இருந்தால்.. வார்த்தைகள் தேவை இல்லை.. நினைவுகள் கூட பேசும்!

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

news

மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு

news

பை தினம் கொண்டாடலாமா.. காகிதப் பை இல்லைங்க.. கணிதப் பை!

news

NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்