பிச்சை புகினும் கற்கை நன்றே!

Jan 23, 2026,03:08 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


கற்கை நன்றே கற்கை நன்றே ....

பிச்சை புகினும்

கற்கை நன்றே ......


கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு .....

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.......

கல்வியே அழிவில்லாத சிறந்த செல்வம்......

கல்வியைப் பற்றிய மேற்கோள்கள் எண்ணிலடங்கா.....




ஏன்?.....


ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவது....

ஒரு மனிதனை முழு வளர்ச்சி அடையச் செய்வது,.......

கல்வி மட்டுமே.......


ஆனால் நம் மாணவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்????


செல்போனில்  பொன்னான நேரத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.....

காலம் பொன் போன்றது.... காலமும் கடலலையும் யார்க்கும் காத்திரா.......

இது அவர்களுக்குத் தெரியாதா????

தெரிந்தும் ஏன் உணர மறுக்கிறார்கள்.....

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்........


மிஸ் ... இப்போ தான் மிஸ்..படிப்போட அருமை தெரியுது.... 

இந்த டயலாக்கை அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் கேட்டிருப்போம்.


திறமையான‌ குழந்தைகள் நிறைய பேர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவறான வழிகளில் சென்று வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள்.


கல்வியில் சிறந்து விளங்கிய...... கல்வியினால் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வந்த மனிதர்களைப் படிக்கச் செய்ய வேண்டும்.


கல்வியின்‌ அவசியத்தை அவர்கள் உணர வேண்டும்.கல்வி மட்டுமே காப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.


இளைய சமுதாயம் விழித்தெழ வேண்டும்.கல்வி ஒன்றே சுயமரியாதையைக் காக்கும். சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்‌ என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும்......


ஒருமைக் கண்‌ தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து...


மாணவச் செல்வங்களே.. பெற்றோர்களை மனதில் நிறுத்தி......உங்களின் எதிர்காலத்தையும் நினைவில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். உலகம் உங்கள் கையில்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்