சென்னை: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நாளை மாலை வலுவிழுந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வானிலை ஆய்வாளர்களை தொடர்ந்து குழப்பியபடி உள்ளது. அது மிகப் பெரிய புயலாக உருவெடுக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் இலங்கைக் கரையைத் தாண்டத் தொடங்கியபோது அது அப்படியே நின்று விட்டது. மேலும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக புயல் சின்னமானது தொடர்ந்து நகர முடியாமல் இருந்தது. இதனால் இது புயலாக மாறுமா என்ற குழப்பமும் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. திரிகோணமலையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டனத்துற்கு 340 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தூரத்திலும் இது நிலை கொண்டுள்ளது.
இதே வேகத்துடன் 29ம் தேதி காலை வரை தொடர்ந்து இது நகர்ந்து வரும். அதன் பிறகு வட மேற்கில் வலுவிழந்து 29ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் மாறும். தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கரைப் பகுதிகளில் குறிப்பாக காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நவம்பர் 30ம் தேதி காலை இது கரையைக் கடக்கும்.
புயல் சின்னம் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரையிலும், இடை இடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புயல் அபாயம் நீங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!
விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்
கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு
கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!
கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?
{{comments.comment}}