- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தீபாவளி வந்தாலே முறுக்கு, அதிரசம், சீயம் என்றுதான் நம்மில் பலரும் சுற்றுவோம்.. விடிய விடிய இதை செய்து சாப்பிடுவது தனி சுகம்தான்.. கூடவே கொஞ்சம் வித்தியாசமான ஸ்வீட்ஸும் செஞ்சு சாப்பிட்டால் அதுவும் ஒரு ஜாலிதானே.. அப்படிப் பார்த்தால் நீங்க இந்த தீபாவளிக்கு முந்திரி கேக் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்களேன்.. நல்லாருக்கும்.
முந்திரி கேக் செய்வது ஈஸிதாங்க.. வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முந்திரி - 1/2 கப்பு
ஜாதிக்காய் - 1/2 (1 பின்ச் துருவியது)
சர்க்கரை பொடி - 1 கப்
நெய் - 1 கப் (காய்ச்சியது)
செய்முறை :
* முந்திரியை கழுவி விட்டு, 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கேக் வெள்ளையாக வருவதற்கு 1/2 டம்ளர் காய்ச்சிய பாலை சேர்த்து முந்திரியை பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கனமான கடாயில் அரைத்த விழுது சேர்த்து, அடிப்பிடிக்காமல் மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும்.
* ஒரு கப் அளவிற்கு சர்க்கரை பொடி, ஜாதிக்காய் சேர்த்து கிளற வேண்டும்.
* நெய்யை நன்றாக சூடு செய்து, ஆயில் பதம் வந்ததும் இதோடு சேர்க்க வேண்டும்.சிறிது சிறிதாக சேர்த்து அடிப்பிடிக்காமல், கை விடாமல் கிளற வேண்டும்.
* கலவை கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் ஊற்றி, 1/2 மணி நேரம் ஆறிய பிறது கத்தியால் டைமண்ட் வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}