- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தீபாவளிக்கு பலகாரம் சாப்பிடுவதை விட அதை செஞ்சு ரெடி பண்றதுதான் பெரிய வேலை. ஸ்வீட் பண்ணியாச்சுன்னா, அதுக்கேத்த மாதிரி காரத்தையும் ரெடி பண்ணனும்.. அப்பதானே வீட்ல இருக்கிறவங்க பேலன்ஸ்டா சாப்பிட முடியும்.. அதுக்குத்தான் உங்களுக்காவே சூப்பரான ஒரு காரம் ரெசிப்பியுடன் வந்திருக்கோம்.
ரிப்பன் பூண்டு பக்கோடா செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. இல்லாட்டி செஞ்சு பாருங்க.. சூப்பரா இருக்கும் சாப்பிட. சிம்பிளான தயாரிப்பு முறைதான் இதுக்குத் தேவைப்படும். வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 2 கப்
வர மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
பொட்டுக்கடலை - 2 கப்
ஓமம், எள் - தலா 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
* இட்லி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து, வர மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி கலவையுடன் பொட்டுக் கடலை மாவு, அரை கப் காய்ச்சிய எண்ணெய் ஊற்றி, ஓமம், எள், சீரகம் தேவைக்கு ஏற்ப சேர்த்து பிசைய வேண்டும்.
* முறுக்கு அச்சில் கலவையை வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் பிழிந்து விடவும்.
* நன்கு வெந்து, எண்ணெய் கொதி அடங்கியதும் பக்கோடாவை ஜல்லிக் கரண்டியால் எண்ணெய்யை வடித்து எடுக்க வேண்டும்.
* மொறு மொறு ரிப்பன் பக்கோடா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}