வட இந்திய கேங்ஸ்டர்களுக்கு நேரம் சரியில்லை.. திஹார் சிறைக்குள் ஒருவர் அடித்துக் கொலை!

May 02, 2023,09:59 AM IST
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் கேங்ஸ்டர்கள் ஆதிக் அகமதுவும், அவரது தம்பியும், ஆதிக்கின் மகனும் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் டெல்லி திஹார் சிறைக்குள் ஒரு கேங்ஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இன்று அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் தில்லு தஜ்பூரியா. இவரை எதிர்கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் இரும்புக் கம்பிகளால் அடித்தே கொன்று விட்டனர். தில்லு தஜ்பூரியா என்கிற சுனில் மானுக்கும், யோகேஷ் துண்டா என்ற இன்னொரு கேங்ஸ்டர் கோஷ்டிக்கும் இடையே நீண்ட நாள் விரோதம் இருந்து வந்தது.
 


இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லுவை தீர்த்துக் கட்ட யோகேஷ் துண்டா கோஷ்டி திட்டமிட்டு வந்தது. அதன்படி அந்தக் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் கைதிகளாக  சிறைக்குள் ஊடுறுவியிருந்தனர். இன்று தோதாக சமயம் கிடைத்ததால் தில்லுவைத் தீர்த்துக் கட்டி விட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தில்லுவை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் ரோஹித் என்ற இன்னொரு கைதியும்காயமடைந்தார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை.

2021ம் ஆண்டு ரோஹினி கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜிதேந்தர் கோகி என்ற கேங்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் முக்கிய சதிகாரரே இந்த தில்லுதான்.வக்கீல்கள் போல வேடம்  போட்டு கோர்ட்டுக்குள் புகுந்த தில்லுவின் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர் கோகியை சுட்டுக் கொன்றனர். போலீஸார் திருப்பிச் சுட்டதில் இந்த இரண்டு பேரும் பலியானார்கள்.

இந்த மோதலைத் தொடர்ந்து தில்லு தரப்புக்கும், கோகி கோஷ்டிக்கும் இடையே பகை வலுத்தது. இரு தரப்பும் பழிவாங்குவதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் திப்புவை போட்டுத் தள்ளி விட்டது யோகேஷ் கோஷ்டி.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்