டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பரபரப்படைந்தனர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தை மக்கள் நன்றாக உணர முடிந்தது. அதேசமயம், எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. துர்காபாய் தேஷ்முக் கல்லூரி அருகே நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு ஏரி உள்ளது. கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பகுதியில் அவ்வப்போது லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிக அளவு என்றால் கடந்த 2015ம் ஆண்டில் இங்கு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போது அதை விட அதிக அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அதிர்வை உணர்ந்த பிரதமர் மோடி
இந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியே டிவீட் போட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அமைதியாகவும், உரிய முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உஷாராகவே இருங்கள். அதிகாரிகள் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னாள் டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்டோரும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளனர். டெல்லி காவல்துறை மக்கள் அமைதியுடன் இருக்குமாறும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}