டெல்லி : டெல்லி அவசரச்சட்ட மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு மேலும் ஒரு ஆதரவு கிடைத்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவைத் தொடர்ந்து , தற்போது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் பாஜக.,விற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
டெல்லி மாநிலத்தின் ஆட்சி அதிகாரம், அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த சட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டு வந்து, அந்த திருத்தப்பட்ட அவசர சட்ட மசோதாவை சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த அவரச சட்டத்தை நிறைவேற்ற விடக் கூடாது என ஆம்ஆத்மி கட்சி கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை அரவிந்த் கெஜ்ரிவால் நாடி உள்ளார். பாஜக.,விற்கு எதிராக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியான இ-ந்-தி-யா., சார்பில் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது ஒரு புறம் இருந்தாலும் பாஜக.,விற்கு லோக்சபாவில் பலம் அதிகம் என்பதால் அங்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று விடும். ஆனால் 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பாஜவிற்கு 103 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ராஜ்யசபாவில் 7 இடங்கள் காலியாக வேறு உள்ளன. இதற்கிடையே ராஜ்யசபாவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் 120 உறுப்பினர்களின் ஓட்டு பாஜக.,விற்கு தேவை. ஏற்கனவே ராஜ்யசபாவில் 9 உறுப்பினர்களையும், லோக்சபாவில் 22 உறுப்பினர்களையும் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இதனால் பாஜக.,வின் பலம் 112 ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் டில்லி அவசர சட்ட விவகாரத்தில் பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர 5 நியமன எம்பி.,க்கள், ஒரு சுயயேட்சை எம்பி.,யும் பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதால், பெரும்பான்மையை விட அதிக பலத்தை பாஜக பெற்று விட்டது. இது தவிர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோரும் டில்லி அவரச சட்ட விவகாரத்தில் பாஜக.,விற்கு ஆதரவு தர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}