டெல்லி: ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்க ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவுக்கு பாஜக கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நஷா என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாவனர் நடிகை பூனம் பாண்டே. மாடலிங் துறையில் பிரபலமான இவர் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அதுமட்டும் இன்றி, கடந்த பிப்ரவரி 2, 2024 இவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று இவரது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அடுத்த நாள், இது நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாடகம் செய்தேன் என்று கூறி அப்போதும் சர்ச்சையில் சிக்கினார்.

பல சர்ச்சைகளில் சிக்கிய இவரை டெல்லியில் உள்ள புகழ் பெற்ற நாடக சபையான ராம் லீலா குழு , ராமாயண நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாடகத்தில் இலங்கை அரசன் ராவணனின் மனைவி மண்டோதரியாக பூனம் பாண்டே நடிக்கவிருக்கிறார். நாளை முதல் ஆரம்பமாகிறது இந்த நாடகம்.
இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே, மண்டோதரி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கா மாட்டார் என்று கூறி பாஜக மற்றும் விஎச்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பூனம் பாண்டேவுக்கு பதிலாக வேறொருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கோரிக்கையும், பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது எங்களுக்குத் தவறாக தெரியவில்லை. குழுவில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் நடிகை பூனம் பாண்டேவும் ஒருவர் என ராம் லீலா குழு பதிலளித்துள்ளது.
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}