12,000 ஊழியர்களின் வாழ்க்கையில் விளையாடும் டெல் நிறுவனம்.. அதிர்ச்சியில் சக பணியாளர்கள்!

Aug 07, 2024,06:14 PM IST

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவைச் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல், அதன்  சேல்ஸ் பிரிவில் இருந்து 12,000த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனமான டெல் மீண்டும் பணிநீக்க  நடவடிக்கையில் இறங்கி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலையின்மை  அதிகரித்து வருவது, அந்நாட்டு பங்குசந்தையை பதம் பார்த்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் இன்டெல் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய நிலையில், இந்த வாரம் டெல் நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் டெல் அதிகப்படியான பணத்தைச் சேமிக்க வழிவகுத்தாலும், இந்த சேமிப்பை வைத்துப் பிற முக்கியமான திட்டத்தை டெல் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ ப்ராடெக்ட் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த பணிக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக ப்ளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. உலகமே ஏஐ தொழில் நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் டெல் நிறுவனமும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாற உள்ளது. தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி எத்தனை பேரை பணி நீக்கம் செய்ய  உள்ளது என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் டெல் நிறுவனத்தின் இந்த பணி நீக்க சுற்றில் சுமார் 12,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏஐ திறன்களில் முதலீடுகளை அதிகரிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் விளங்குகிறது.டெல் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தில் முக்கியமான விஷயம் ஏஐ சேவைக்கும், ப்ராடெக்களை உருவாக்குவதற்கும் புதிய பிரிவை உருவாக்கப்படுவது தான். டெல் நிறுவனம் ஏஐ சேவைகளுக்கு ஏற்ற சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர் பிரிவில் உயர்தர சேவையை வங்கும் நிறுவனமாக மேம்படுத்துவதே புதிய ஏஐ பிரிவு அமைப்பதற்கான நோக்கமாக உள்ளது. 2023ம் ஆண்டு 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இந்த புதிய பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்