சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் தமிழக முதல்வரும், தனது தந்தையுமான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். உதயநிதிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 40க்கு 39 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த படியாக 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போது சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். 2022ம் ஆண்டு விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு துணை முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

திமுகவின் பிரச்சாரங்களில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருவது உதயநிதிதான். அவரது ஒற்றை செங்கல் பிரச்சாரம் நாடு முழுவதும் பாப்புலரானது. அவரது சிம்பிளான பேச்சுக்களும், அதேசமயம், உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் ஸ்டைலும் திமுகவினரைத் தாண்டி பிற கட்சியினராலும் கூட ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
தனது பிறந்த நாளையொட்டி, சென்னை சிஐடி நகரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தனது தாய் துர்கா ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றார் உதயநிதி. அப்போது உதயநிதி கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் பின்னர் பேரறிஞர் அண்ணா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடங்களுக்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செய்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், உயிரையும் உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}