90ஸ் கிட்ஸுக்குப் பிடிக்காத செய்தி.. தாத்தா வயது 60.. இதுவரை 26 கல்யாணம்.. 100தான் இலக்காம்!

Feb 23, 2023,04:13 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் இதுவரை 26 கல்யாணம் செய்துள்ளார்.அவரது இலக்கு 100 கல்யாணம் செய்வதுதானாம். செய்தியைக் கேள்விப்பட்ட 90ஸ் கிட்ஸ் எல்லாம் காதில் புகை விட்டுக் கொண்டுள்ளனராம்.



இந்த தாத்தா 26 முறை திருமணம் செய்தும் கூட தற்போது இவருடன் வசிப்பது 4 மனைவிகள்தான். மற்றவர்களை விவாகரத்து செய்து விட்டார். அவர்கள் போனது பற்றியும் கவலைப்படவில்லையாம்.. இப்போது இருக்கும் 4 மனைவிகள் குறித்தும் கவலைப்படவில்லையாம். மாறாக 10 கல்யாணமாவது செய்வதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்று அசராமல் சொல்கிறார் இந்த தாத்தா.

வெறுமனே கல்யாணம் செய்வது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் குழந்தையைப் பெறுவதும் இவரது நோக்கமாக இருக்கிறதாம். குழந்தை பிறந்ததும் அந்த மனைவியை விவாகரத்து செய்து விடவாராம். இவர் குறித்து ஜியோத் ஜீத் என்ற டிவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் செய்தியாக வந்துள்ளது.

தனது இளம் மனைவிகள் புடை சூழ இந்தப் பேட்டியைக் கொடுத்துள்ளார் இந்த தாத்தா. இந்த மனைவிகளின் வயது 19 முதல் 20 வயதுக்குள்தான் இருக்கும்.  இவர்களுக்குக் குழந்தை பிறந்ததும் இவர்களை விட்டு பிரிந்து விடுவாராம். அதையும் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

100 கல்யாணம் 100 விவாகரத்து.. இதுதாங்க என்னோட லட்சியம்.. இதைத் தவிர வேற என்னங்க இருக்கு என்று கொஞ்சம் கூட அதிராமல், கவலைப்படாமல் ஜாலியாக சொல்கிறார் இந்த தாத்தா. இவருக்கு மொத்தம் 22 பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் மூலம் பேரக் குழந்தைகளும் உள்ளனர். அனைவருமே அவரவர் தாயாருடன் வசிக்கிறார்களாம். விவாகரத்து செய்த கையோடு அனைவருக்கும், வீடு உள்ளிட்டவற்றையும் இவரே ஏற்பாடு செய்து கொடுத்து விடுவாராம். 

"பிரேம்ஜி" சார்.. என்ன கொடுமை சார் இதெல்லாம்...!

சமீபத்திய செய்திகள்

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்