பிஎச்டி படிப்பை.. 52 வருடமாக கற்றுத் தேறிய 76 வயது தாத்தா!

Feb 16, 2023,12:39 PM IST
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த  76 வயது முதியவர் ஒருவர், கடந்த 52 வருடத்திற்கு முன்பு பதிவு செய்த பிஎச்டி ஆய்வுப் படிப்பை இடையில் தொடராமல் விட்டு விட்டு இப்போது முடித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்.



வாழ்க்கை பூராவும் நாம் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம்.. கற்றலுக்கு வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். ஆனால் இங்கிலாந்தில் ஒருவர் தனது வாழ்க்கை முழுவதையும் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு,  50 வருடங்களுக்குப் பிறகு ஆய்வை முடித்து அசத்தியுள்ளார்.

பிஎச்டி ஆய்வு படிப்புகள் பெரும்பாலும் ஐந்து அல்லது 6 வருடங்களில் முடிந்து விடும். அதற்கு மேல் பெரும்பாலும் ஆகாது. ஆனால் இந்த முதியவர் 1970ம் ஆண்டு பிஎச்டி படிப்பை படிக்கத் தொடங்கி தற்போதுதான் அதை முடித்துள்ளார். அதாவது 52 வருடம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த முதியவரின் பெயர் டாக்டர் நிக் ஆஸ்க்டன்.1970ம் ஆண்டு இவருக்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கணித சமூகவியல் துறையில் பிஎச்டி படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் அதைத் தொடராமல் அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு மீண்டும் தனது படிப்பை தொடங்கினார். இம்முறை பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பிலாசபி படித்தார். அப்போது அவருக்கு வயது 69. பின்னர் அதே பிரிவில் பிஎச்டி படிக்க ஆரம்பித்து 2022ம் ஆண்டு தனது 75ம் வயதில் அதை முடித்தார்.

நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. தனது மனைவி கிளேர் ஆக்ஸ்டன் மற்றும் 11 வயது பேத்தி பிரேயா முன்னிலையில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார் ஆக்ஸ்டன்.

தனது ஆய்வு குறித்து ஆக்ஸ்டன் கூறுகையில், நான்  எடுத்துக் கொண்ட தலைப்பு மிகவும் கடினமானது. 70வயதுகளில் இருக்கும் எனக்கு  ஆய்வு என்பது கஷ்டமானதுதான். ஆனால் அதை வாழ்நாள் சவாலாக எடுத்துக் கொண்டேன். 50 வருடங்களுக்கு முன்பு பிஎச்டிக்கு விண்ணப்பித்தேன். இடையில் அதை தொடர முடியாமல் போனது. இப்போது முடித்து விட்டேன் என்றார் புன்னகைத்தவாறு.

இந்த வித்தியாச (மாணவர்) குறித்து இவரது கைடாக இருந்த பேராசிரியர் சமீர் ஓகாசா கூறுகையில், நிக் மிகவும் ஆர்வமானவர். எப்போதும் எனர்ஜியாக இருப்பார். ஒரு மாணவருக்கே உரிய ஆர்வமும் தேடுதலும் அவரிடம் இருந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழிந்து அவர் பிஎச்டி படிப்பை முடித்து  பட்டம் வாங்கியிருப்பது மிகவும் சிறப்பானது என்றார்.

சோமர்செட்டில் உள்ள வெல்ஸ் பகுதியில் தனது மனைவி, 2 குழந்தைகள், நான்கு பேரப் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆக்ஸ்டன்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!

news

சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்