ஈரோடு இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம்...முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளான் இதுதான்

Feb 25, 2023,09:40 AM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) ஈரோடு வருகிறார். அவர் இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள் மற்றும் நேரம் ஆகியவற்றின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் இறுதிக்கட்ட பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்ட நபர்கள் யாரும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் இருக்கக் கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பாக இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் காலையிலேயே துவங்கி நடந்து வருகிறது.

இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்ய வருகிறார். 




முதல்வரின் பிரச்சார விபரம் :

காலை 9 மணி - சம்பத் நகர்
காலை 10 மணி - காந்தி சிலை
காலை 11 மணி - அக்ரஹாரம்
பகல் 3 மணி - முனிசிபல் காலனி (கருணாநிதி சிலை)
மாலை 3.45 மணி - பெரியார் நகர்

பெரிய வலசு பகுதியில் பிரச்சாரத்தை துவங்கும் முதல்வர் பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பஸ் ஸ்டான்ட், மெட்ராஸ் ஹோட்டல், மஜீத் வீதி, கேஎன்கே ரோடு, மூலபட்டறை, பவானி ரோடு. பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி, சம்பத் நகர், இடையங்காட்டு வலசு, சின்ன முத்து வீதி, மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா ஆகிய பகுதிகள் வழியாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஏற்கனவே திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு முறை பிரச்சாரம் செய்தார். திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் முதல்வரும் கலந்து கொள்ம உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்