பாட்டு பாடி ஓட்டு கேட்கும் சீமான்...ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகும் வீடியோ

Feb 14, 2023,11:07 AM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் களைகட்டி உள்ளது. 



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகள் கடும் போட்டி நடத்துகின்றன. இந்த இரண்டு கட்சிகள் சார்பில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோர் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பிருந்தே பிரசாரத்தை துவக்கி விட்டனர். இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.



நாம் தமிழர் கட்சி தலைவர் மேனகா, விவசாயி சின்னத்தில் போட்டுயிடுகிறார். இவருக்காக அக்கட்சியின் தலைவரான சீமான், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வழக்கமாக மேடைகளில் ஆவேசமாக பேசும் சீமான், தற்போது பாட்டு பாடி ஓட்டு சேகரிக்க துவங்கி உள்ளார். 

மேனகாவிற்கு ஆதரவாக சீமான், மேடையில் பாட்டுப்பாடி பிரசாரம் செய்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் சீமான், ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காதே...கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத...உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம் என விஜயகாந்த் நடித்த கரிமேட்டு கருவாயன் படத்தின் பாடலை ரீமேக் செய்து பாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்