ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுகளும் தருவது கொஞ்சம் கூட குறையவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
அனல் பறக்க நடந்து வந்து தேர்தல் பிரச்சாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களைக் கவர சரமாரியாக பணத்தை இறக்கி விட்டன. இதில் திமுகவின் பங்குதான் அதிகம் என்று சொல்கிறார்கள். மொத்த அமைச்சர்களையும் திமுக களத்தில் இறக்கியுள்ளது. போதாக்குறைக்கு சென்னை மாநகர மேயர் பிரியாவையும் கூட்டி வந்து பிரச்சாரம் செய்தனர்.

திமுக இந்த வெற்றியை தனது வெற்றியாகவும், ஆட்சிக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்பது போலவும் பார்க்கிறது. அதிமுகவோ, தனது பலத்தை நிரூபிக்க துடிக்கிறது. மறுபக்கம் நாம் தமிழர் கட்சியும் தன் பங்குக்கு போட்டியைக் கடுமையாக்கியுள்ளது. திமுகவுக்கும்,நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கடும் மோதலும் கூட தொகுதியில் மூண்டது. சீமானின் பேச்சுக்களால் அருந்ததியினர் சமுதாயத்தினரும் கடும் கோபமடைந்தனர்.
இப்படி அனல் பறக்க நடந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆனாலும் பண மழை இன்னும் ஓயவில்லையாம்.. பரிசு மழையும் அடங்கவில்லையாம். கொலுசு, மூக்குத்தி, பரிசு டப்பா, சேலை, வேட்டி என்று சரமாரியாக திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்குக் கொடுத்து வருகின்றனர். இரு கட்சியினரும் டோக்கன்கள் கொடுத்து பரிசுப் பொருட்களைக் கொடுக்கிறார்களாம். இதை வாங்க மக்களும் முண்டியடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஈரோடு கிழக்கு.. குடிமகன்களுக்கு பேட் நியூஸ்.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு லீவு!
இப்படிப்பட்ட கொடுமையான சூழலில்தான் நாளை தேர்தல் நடைபெறப் போகிறது. இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் ஆவர். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆகும். அதாவது பெண் வாக்காளர்களே அதிகம். இதனால்தான் மூக்குத்தி, கொலுசு என களம் இறங்கி விட்டன கட்சிகள். 25 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
இடைத் தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் விவரம்:
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}