நானும் பெரியாரின் பேரன் தான்..  அதற்காக அரசியலுக்கு வரவில்லை.. தெறிக்க விட்ட கமல்!

Feb 20, 2023,10:56 AM IST
ஈரோடு : நான் சுய லாபத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை என ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல் பேசினார். 



கமல்ஹாசனின் பிரச்சார பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி உள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி போட்டியிடாது என அறிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.

கமலின் ஈரோடு வருகையை முன்னிட்டு நேற்று காலை முதலே ட்விட்டரில் #Kamalhaasan ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வந்தது. மாலையில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரத்தை துவக்கிய கமல் பேசுகையில் அதிரடியாக பேசி தெறிக்க விட்டார்.



கமல்ஹாசன் பேசுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியார் பேரன்.. அவர் மட்டுமல்ல.. நானும் பெரியாரின் பேரன் தான். பெரியாரின் மேடைப் பேச்சுக்களை கீழே நின்று கேட்டு வளர்ந்த பிள்ளை நான். நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். 

நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ இல்லை. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன்.கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும் போது எதுவும் தப்பில்லை. எல்லாம் நியாயம். நாட்டிற்காக கட்சி வரையறைகளை கடந்து கரம் கோர்த்திருக்கிறேன். 

விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்புகொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். என் சொந்த பிரச்சனை, நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்று சொன்னேன். சுயநலத்திற்காக கூட்டணி வைக்கவில்லை.

நாட்டை காப்பாற்றவே இங்கு வந்துள்ளேன். தமிழர்களை அடக்கி ஆள முடியாது என அந்த மையத்திற்கு சொல்ல வேண்டும். தமிழர்களின் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய தேர்தல் இது. ஆகவே ஒன்றிணைந்துள்ளோம் என்று பேசினார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்