தனுஷின் வாத்தி எப்படி இருக்கு?...ரசிகர்களை கவர்ந்தாரா? பல்பு வாங்கினாரா?

Feb 17, 2023,11:24 AM IST
சென்னை : தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாத்தி. நாக வம்சி, சாய் செளஜானா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாத்தி படம் பிப்ரவரி 17 ம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் இப்படம் ரிலீசாகி உள்ளது. 



படம் இந்த காலத்தில் துவங்குவதாக காட்டப்பட்டாலும்1990 களுக்கு பிளாஷ்பேக் செல்கிறது. 1990 களின் துவக்கத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த போது இன்ஜினியரிங், மெடிக்கல் போன்ற படிப்புக்கள் வியாபாரமாக்கப்படுவதை தெரிந்த சில தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளை மூடுகின்றனர். இதனால் போராட்டம் வெடிக்கிறது. இதன் விளைவாக அரசு கட்டண ஒழுங்குமுறை வந்ததால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி வருகிறது.

தனியார் பள்ளிகளின் சதியை தெரிந்து கொண்ட அரசு பள்ளி கூட்டமைப்பின் தலைவர் சமுத்திரக்கனி, அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அனைவருக்கும் கல்வி என அறிவிக்கிறார். இதற்காக இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்கள் அனுப்பப்படுகிறார்கள். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இருக்கு கணக்கு வாத்தியார் பாலாவாக வரும் தனுஷிற்கு பல தடைகள் வருகிறது. இந்த தடைகளை தாண்டி அவர் வெற்றி பெறுகிறாரா, அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்கிறாரா என்பது தான் படத்தின் மீதி கதை.



ஃபர்ஸ்ட் ஆஃப்பில் தியேட்டரில் விசில் பறக்கிறது. தனுஷ் வழக்கம் போல் தீயாய் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எமோஷனல் சீன்கள், டையலாக்குகளில் தனுஷ் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிட்டதட்ட ஒன் மேன் ஆர்மியாக படத்தை கொண்டு சென்றுள்ளார். ஹீரோயின் சம்யுக்தா அடக்கமாக வந்து, கச்சிதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். செகண்ட் ஆஃபில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக எடுத்துரைத்துள்ளனர். சோஷியல் மெசேஜ் உடனான பொழுதுபோக்கு,  ஆக்ஷன், சென்டிமென்ட் படமாக அமைந்துள்ள வாத்தி படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிளஸ் என்ன ?

ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தின் வசனங்கள், தனுஷின் நடிப்பு ஆகியன படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். ஃபர்ஸ்ட் ஆஃப்பில் இருக்கும் சுவாரஸ்யம் ரசிகர்களை சீட்டில் கட்டிப் போட்டுள்ளது. காதல் கலந்த மெலடி, ஆட்டம் போட வைக்கும் நடனம் என பாடல்கள் படத்திற்கு மற்றொரு பிளஸ்.

மைனஸ் என்ன?

கல்வி கொள்கை, அரசு பள்ளிகளுக்கு எதிராக தனியார் பள்ளிகள் செய்யும் சதி இவை எல்லாம் ரொம்பவே பழைய சினிமா டெக்னாக் போன உள்ளது. இந்த சீன்கள் கொஞ்சம் பொறுமையை சோதிப்பதாகவும், கனா காணும் காலங்கள் வெப் சீரிசை தனுஷ் வெர்சனாக பெரிய திரையில் பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. 

படம் எப்படி இருக்கு : 

கொடுத்த டிக்கெட் காசுக்கு வொர்த் தான். பார்க்கலாம் என்றே பெரும்பாலான விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தாலும் விமர்சன ரீதியாக பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றுள்ளதால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்