"சந்திரசேகர ராவ் தெலுங்கானாவின் தாலிபன்"..  கொந்தளித்த ஷர்மிளா!

Feb 20, 2023,09:48 AM IST
ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேர ராவை விமர்சித்து பேட்டி அளித்த ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவராக இருக்கிறார். தெலங்கானாவில், பிஆர்எஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பதற்காக இவர் களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால் ஏதாவது ஒரு போராட்டத்தை அவ்வப்போது நடத்தி தலைவலி கொடுத்து வருகிறார்.



ஷர்மிளா தற்போது தெலுங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை, முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியினர் கிழித்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

இதனால் பாதயாத்திரைக்கான அனுமதியை போலீசார் ரத்து செய்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஷர்மிளா தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். இதனால் பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் மகபூபாபாத் எம்எல்ஏ சங்கர் நாயக் குறித்து ஷர்மிளா தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலுங்கானா முதல்வர் சர்வாதிகாரியை போல் நடந்து வருகிறார். அவர் தெலுங்கானாவை இந்தியாவின் ஆப்கானிஸ்தான் ஆக்குகிறார். இங்கு சந்திரசேகர ராவ், தாலிபனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தெலுங்கானாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் கிடையாது. ராவின் அரசியலமைப்பு தான் உள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்