தென் ஆப்பிரிக்காவிலிருந்து.. மத்தியப் பிரதேசத்திற்கு வரும்.. 12 சிறுத்தைகள்!

Feb 17, 2023,04:26 PM IST
போபால்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 18ம் தேதி வருகின்றன.



12 சிறுத்தைகளில் 5 பெண் சிறுத்தைகள் ஆகும்.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை அன்பளிப்பாக கோரியிருந்தது இந்தியா. இதையடுத்து தற்போது இந்த சிறுத்தைகளை தென் ஆப்பிரிக்கா நமக்கு வழங்கவுள்ளது. 

சிறுத்தைகள் வந்து சேர்ந்ததும் அவை குனோ தேசிய பூங்காவில் விடப்படும். சிறுத்தைகளை பூங்காவுக்குள் திறந்து விடும் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர்யாதவ், முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் கலந்து கொள்வார்கள். குனோ தேசியப் பூங்கா, சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, தனது 72வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இதே குனோ தேசியப் பூங்காவில், நமீயாவிலிருந்து வருகை தந்த 8 கருஞ்சிறுத்தைகளை திறந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.  அதில் ஐந்து பெண் ஆகும்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளையும் கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படை விமானம் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்த சிறுத்தைகள் நேராக குவாலியலிர் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பசும்பொன்னில் பூசாரியுடன் மோதல்.. ஸ்ரீதர் வாண்டையர் தர்ணா.. சமாதானப்படுத்திய செங்கோட்டையன்

news

கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்

news

பசும்பொன்னில் ஒன்றாக சேரும் ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன்... அடுத்து என்ன?

news

6 வருடங்களுக்குப் பிறகு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் face to face meeting!

news

அரபிக் கடலில் மெல்ல மெல்ல நகரும் காற்றழுத்தம்.. புனேவுக்கு கன மழை எச்சரிக்கை

news

உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில்.. இந்த முறையும் போட்டியிட மாட்டார்.. முதல்வர் நிதீஷ் குமார்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

அதிகம் பார்க்கும் செய்திகள்