சிவகங்கை : 6 முதல் 12 வரைவிலான பாடநூல்களை படித்தாலே அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளலாம். கல்வி மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தரும் என கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து வானொலி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மாணவர்களிடம் வலியுறுத்தி பேசினார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் வானொலி ஒருங்கிணைப்பாளர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய வானொலி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோரை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

இதனை தொடர்ந்து மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது வேல்முருகன் மாணவர்களிடம் பேசுகையில்,
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மட்டுமே மிகுந்த உதவியாக இருக்கும்.படிப்பு ,படிப்பு ,படிப்பு என்பது வாழ்க்கையில் எப்பொழுதுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பாட நூல்களைப் படித்தால் ஐஏஎஸ் தேர்வு வரை மிக எளிதாக பதிலளிக்கலாம்.

ஆறாவது முதல் 10 வரையிலான படிப்பை கவனமுடன் படியுங்கள். அந்த புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகிறது. எனவே கல்வியை முக்கியமாக வாழ்க்கையில் வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி தானாக வந்து சேரும். கல்லூரிக்கே போகாமல் மாநில மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
நான் பலமுறை போட்டித் தேர்வுகளில் தோல்வியுற்றாலும் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே இலக்குடன் முயற்சி செய்ததால் மாநில அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பிறகு அப்பணியில் இருந்து மத்திய அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று மத்திய அரசு ஊழியராக பணியாற்றி கிறேன்.எனவே நன்றாகப் படியுங்கள். வாழ்க்கையில் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என பேசினார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}