சிவகங்கை: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசம் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், கவிதை என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கூடவே செல்பி எடுக்கும் புகைப்படப் போட்டியும் நடைபெற்றது.
அய்யன் திருவள்ளுவருக்கு குமரிக் கடல் நடுவே, விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு, 2000, ஜனவரி 1 இல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 2025-ஆம் ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்படவுள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு திருக்குறளை எடுத்துச் சொல்லும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஆறு வயது முதல் உள்ள மாணவர்கள் ஒரு அதிகாரமும், 10 வயது வரை உள்ள மாணவர்கள் மூன்று அதிகாரங்களும், 14 வயது வரை உள்ள மாணவர்கள் ஐந்து அதிகாரங்களையும் ஒப்பிவித்து அதனை வீடியோவாக பதிவேற்றம் செய்தனர். அதேபோல் ஓவியம் வரையும் திறமையுள்ள முதல் ஐந்து வகுப்பு மாணவர்கள் திருவள்ளுவரின் படத்தை வரைந்து புகைப்படம் எடுத்தனர்.

இது தவிர திருக்குறளின் சிறப்பு குறித்து இப்பள்ளி மாணவ மாணவியர்கள் கவிதை கூறி அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தேவகோட்டை பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள திருக்குறள் எழுதப்பட்ட இடத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் திருவள்ளுவர் சிலை 25 வது ஆண்டு முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்த வீடியோக்கள், திருக்குறளுடன் எடுத்த செல்பி,திருக்குறள் கவிதை வீடியோக்கள், திருக்குறள் ஓவியம் வரைந்த புகைப்படங்கள், அனைத்தையும் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர், முத்துமினாள் ஆகியோர் செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அனுபவம்!
திருப்பாவை திருத்தும் பார்வை!
My dear Santa.. என் இனிய சான்டா கிளாஸுக்கான ஆசைகள்!
மெகா ஸ்டார் மோகன்லாலின் ரூ. 421 கோடி சாம்ராஜ்ஜியம்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
உடம்பு சரியில்லையா.. பேசாம சத்து மாவு கஞ்சி சாப்பிடுங்க.. செய்வதும் சுலபம்.. ஹெல்த்தியும் கூட!
சென்னை கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடி கைது
பனையூரில் தவெக தலைவர் விஜய் காரை மறித்த பெண் நிர்வாகியால் பரபரப்பு
{{comments.comment}}