ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

Jun 04, 2026,05:37 PM IST
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை, மூத்த மாணவர்கள் ரோஜா பூ வழங்கி அன்புடன் வரவேற்றனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினர்.



இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையேற்றார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி, முத்துமீனாள் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும், ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

புதிய மாணவர்களுக்கு இனிமையான மற்றும் நட்புறவான சூழலை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்