ஆடி அமாவாசை.. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி

Aug 01, 2024,01:40 PM IST

விருதுநகர்:   ஆடி அமாவாசையையொட்டி இன்று முதல் 5ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில்  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி ஆகிய நாட்களில் இம்மலைக்கு அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.




இந்த கோவிலுக்கு செல்லும் பாதை வனப்பகுதிக்குட்பட்ட மலைப்பாதை என்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். தினமும் இங்கு சாமி தரிசனம் செய்ய முடியாது. மாதத்திற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.


சதுரகிரி மலைக்கு மற்ற அமாவாசைகளை விட ஆடி அமாவாசைக்கு தான் அதிகளவில் கூட்டம் வரும். இந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி (இன்று) முதல் 5 ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதே போல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.


இங்கு இரவில் தங்கக்கூடாது. அருகில் உள்ள ஓடைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் முன்னேற்பாட்டு பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர். இந்த 5 நாட்களுக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வனத்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

"டிரம்ப் பெருங்கடல்" : பெருங்கடல்களின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம்!

news

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி நன்றி!

news

Navaratri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?

news

Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!

news

நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!

news

D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!

news

நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!

news

Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை

news

மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்