சென்னை: ராயன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55ஆவது படத்தில் கமிட்டாகி உள்ளார். தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் இப்படம் மிக சிறந்த படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமான தனுஷ் தனது தனி திறமையால் விடாமுயற்சியுடன் செயல்பட்டு , ஒரு பாடகராக, தயாரிப்பாளராக, பாடல் ஆசிரியராக, இயக்குநராக இன்று விஸ்வரூப வளர்ச்சியைப் பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞராக அசத்தும் தனுசை கோலிவுட்டில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரைக்கும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ராயன் படத்தை தனுஷ் தானே நடித்து இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வெளியாகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்து விட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கில் குபேரா என்ற படத்திலும், ஹிந்தியில் தேரே இஷ்க் மேன் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனுஷின் அடுத்த பட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது.இப்படம் தமிழ் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படத்தின் கதைக்களம் மக்களிடையே பேராதரவை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை படம் சூப்பர் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு பாராட்டி வருகின்றனர். இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியையே சென்று சேரும். அவர்தான் இப்படத்தின் கதைக்களத்தை உண்மைத்தன்மை மாறாமல் அதே பிரதிபலிப்புடன் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தனுசுடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து தனுஷ் தனது 55 ஆவது படத்தில் களமிறங்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அமரன் படத்தின் வெற்றியின் காரணமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ரேஞ்ச் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதனால், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் தனுஷின் 55 வது படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை போலவே, தனுஷின் 55 ஆவது படத்திலும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் தனித்துவமான கதைக்களம் ரசிகர்களை மகிழ வைக்கும் என கோலிவுட்டில் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சுஷ்மிதா அன்பு செழியன் தனுஷின் 55 வது படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பட பூஜை இன்று நடைபெற்றது. அப்போது இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுஷ்மிதா அன்பு சுஷ்மிதா கூறியதாவது, தனுஷ் சார் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அற்புதமான திறமைமிக்க இந்த இருவரின் கூட்டணியில் இப்படம் ஒரு தலை சிறந்த படைப்பாக இருக்கும் என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}