50வது படத்தில் பிரகாஷ் ராஜுடன்.. 5வது முறையாக இணையும் தனுஷ்.. நடிப்பில் மிரட்டப் போவது யாரு?

Feb 27, 2024,11:14 AM IST

- அஸ்வின்


சென்னை:  சமீபத்தில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே தீயைக் கிளப்பியுள்ளது. செம பரவசத்தில் உள்ளனர். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.


இப்பொழுது இந்தப் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார் .. அவர்தான் பிரகாஷ்ராஜ். தனுஷுடன், பிரகாஷ் ராஜ்  முதல் முறையாக கைகோர்த்த திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம். திருவிளையாடல் ஆரம்பம் படத்தைத் தொடர்ந்து வேங்கை படத்தில் இருவரும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து வந்த படம்தான் அசுரன். பின்னர் திருச்சிற்றம்பலம் படத்தில் இருவரும் நடிப்பில் மிரட்டியிருப்பார்கள்.


திருச்சிற்றம்பலத்திற்கு அப்புறம் இந்த படத்தில் இருவரும் கைகோர்க்கிறார்கள். திருவிளையாடல் ஆரம்பத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை இயக்குனர் பூபதி பாண்டியன் கையாண்டிருப்பார். குருவாக பிரகாஷ் ராஜும் திருவாக தனுஷும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதேபோல இயக்குனர் ஹரியும் வேங்கை திரைப்படத்தில் மிகவும் ஒரு கொடூரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார். அசுரன் திரைப்படத்திலும் பிரகாஷ்ராஜ் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பார்.




இயக்குனர் மித்ரன் தனுஷ் கைகோர்த்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் மிகவும் ஒரு கண்டிப்பான ஒரு தந்தையாக அந்த படம் முழுவதும் பிரகாஷ்ராஜ் வலம் வந்திருப்பார். மகன் மீது பாசம் வைத்திருக்கும் அந்த தந்தை கண்டிப்பாகவும் இருப்பார். அந்த அப்பா மகனுக்கான அந்த ஒரு பாசப்பிணைப்பு அந்த படம் முழுவதும் நம்மால் அந்த ஒரு கதாபாத்திரங்களை உணர முடியும். பலரையும் இந்தப் படம் கவர்ந்ததற்குக் காரணம், நிஜ வாழ்க்கையிலும் பலர் இது போன்ற அப்பா, மகன்களாக இருப்பதுதான்.


இப்பொழுது ராயன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்து இருப்பது அந்த படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது. ஏனென்றால் தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தை  இயக்கியபோது, அந்தப் படத்தை ஆக்ஷன் கலந்த குடும்ப திரைப்படமாக அமைத்திருந்தா். ஆனால் ராயன் அதற்கு அப்பாற்பட்டு ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்று தெரிகிறது. 


ஏனென்றால் முதல் போஸ்டரிலேயே சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், தனுஷ் மூவரும் அதுபோன்ற தோற்றத்தில் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக வரும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.  அந்த எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது எஸ் ஜே சூர்யாவின் பங்களிப்பும்.  இப்போது பிரகாஷ் ராஜும் உடன் இணைந்திருப்பதால், படத்திற்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது.


கண்டிப்பாக ஒரு திருவிளையாடல் ஆரம்பத்தை போல, ஒரு அசுரனை போல, ஒரு திருச்சிற்றம்பலத்தைப் போல, ஒரு வேங்கை போல வரவேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. தனுஷ் இதை எந்த அளவுக்கு வலிமையோடு எடுக்கப் போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

news

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

news

டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்