கான்ட்ரவர்சியோட ஸ்பெல்லிங்கே தனுஷ்தானா.. இவரை மட்டும் இப்படி சுற்றி சுற்றி அடிக்கிறாங்களே!

May 17, 2024,12:28 PM IST

- அஸ்வின்


சென்னை: எப்போது எந்த சர்ச்சை வந்தாலும் தனுஷைக் கொண்டு வந்து நடு நாயகமாக உட்கார்த்தி வைத்து விடுகிறார்கள்.. அப்படித்தான் இப்போது சுசித்ராவின் பேச்சும் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. அதில் தனுஷ் பற்றி அவர் கூறிய தகவல்கள் பரபரப்பாய் ஓடிக் கொண்டுள்ளன.


தனுஷ் சிக்காத வதந்தியே கிடையாது என்று சொல்லலாம்.. ஏன்.. சினிமாவில் எது நடந்தாலும் தனுஷ்தான் அதற்குக் காரணம் என்று மட்டும்தான் இன்னும் அறிவிக்கவில்லை.. அந்த அளவுக்கு அவரை வைத்து கும்மியடித்துக் கொண்டுள்ளனர். ஆனால் தனுஷ் இதையெல்லாம் பொருட்படுத்துவது போலவே தெரியில்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு  அவர் திரைப்படங்கள் உண்டு அப்படின்னு அவர் இருக்காரு. தனது இலக்கை மட்டுமே நோக்கி போயிட்டு இருக்காரு.




வதந்திகள் இன்னைக்கு யாரையுமே விட்டு வைக்கல. தனுஷ்க்கு மட்டும் இல்ல நம்ம எல்லாருக்குமே ஏதாவது ஒன்னு நடந்துட்டு தான் இருக்கு. சில வருடங்களுக்கு முன்னால் நடிகர் கார்த்திக் குமாரும் தனுஷும் இணைந்து யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்தார்கள். அந்த படம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அந்த திரைப்படத்தில் நடித்த இயக்குனர் மித்ரன் ஜவகருக்கும் கார்த்திக் குமாருக்கும் தனுஷுக்கும் இடையே மிகப்பெரிய நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் வெளிப்பாடால் அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களை பண்ணி வந்தார்கள்.


சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷ் - மித்ரன் ஜவகருக்கும் கூட்டணிக்கு மிகவும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில்தான் கார்த்திக் குமாரையும், தனுஷையும் வைத்து சர்ச்சை கிளப்பி விட்டார் சுசித்ரா. இவர் கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவி ஆவார். இந்த சர்ச்சை குறித்து இதுவரை தனுஷ் பதில் ஏதும் அளிக்கவில்லை. அதேசமயம் கார்த்திக் குமார் பதில் கொடுத்து விட்டார். அதுவும் சர்ச்சையானது.


தனுஷுக்கு வெற்றியும், தோல்வியும் புதிதல்ல. மாறி மாறி சந்தித்துதான் வருகிறார். வெற்றி கிடைத்தால் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான பச்சைக் கொடியாகவும் தோல்வி ஏற்பட்டால் தன்னைத்திருத்திக் கொள்ள வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்டு அவர் தன்னை மெருகேற்றி கொள்கிறார். இதுதான் அவரது தொடர் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தோல்விகள் இடையில் வந்து மறைந்து மறைந்து போகிறது. அதை அவர் பொருட்படுத்துவதில்லை. இதுதான் அவரது வெற்றியின் தாரக மந்திரம்.


தனுஷைப் பொறுத்தவரை சர்ச்சைகளும் புதுசில்லை, சாதனைகளும் புதுசில்லை. ஒவ்வொரு சர்ச்சைகளையும் சாதனைகளையும் அவர் தினம் தினம் சந்தித்து வருகிறார். என்ன சங்கடமாக இருந்தாலும்,  அவ்வப்போது தனது பாதையில் சறுக்கினாலும் அவரது பயணம் என்னவோ, மிகப்பெரிய சரித்திரத்தை தான் நோக்கி செல்கிறது. அதேசமயம், சர்ச்சைகளுக்கு செல்ல பிள்ளையா இவர் என்று யோசிக்கவும் வைக்கிறது.


ஏனென்றால் எங்கு எது நடந்தாலும் யாரை குறிவைத்து எந்த செய்தி வெளிவந்தாலும் அதுக்கு இவர் தான் காரணம் என்கிறார்கள். ஆனால் இப்படித்தான் முன்பு மதுரை மேலூர் கதிரேசன் தம்பதியினர் இவரை நோக்கி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள் . தனது மகன்தான் தனுஷ் என்று கூறினார் கதிரேசன். பலருடன் இணைத்துப் பேசினார்கள். இவரது திருமண வாழ்க்கை  கசந்தபோது அதையும் வைத்து பல கதைகள் வெளியாகின. இப்படி ஏராளமான சர்ச்சைகளை சுமந்து கொண்டுதான் மறுபக்கம்  உயரங்களையும் தொட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ். 


கான்ட்ரவர்சியோட ஸ்பெல்லிங்கே தனுஷ் தானா?

சமீபத்திய செய்திகள்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

news

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

news

டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்