சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை இனி வீட்டிலிருந்த படியே எளிதில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்திருப்பது, அங்கும் இங்கும் அலைவதை தவிர்க்கும் வகையில், பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரையிலான 50 வகையான அத்தியாவசிய அரசு சேவைகளை இனி வீட்டிலிருந்தே இணையம் வாயிலாகப் பெறும் வசதியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி, வெளிப்படையான முறையில் சான்றிதழ்களைப் பெறலாம். கால விரயம் குறைகிறது. அத்துடன் ஆன்லைன் போர்டல் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் எந்நேரமும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் படி, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate), பட்டா மாறுதல் மற்றும் நில ஆவணங்கள், முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டப் பதிவுகள், மின் இணைப்பு மாற்றங்கள் மற்றும் குடிநீர் வரி செலுத்துதல் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகளை எளிதில் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வமான e-Sevai (இ-சேவை) தளம் அல்லது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் இந்தச் சேவைகளைப் பெற முடியும். மேலும், ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அரசு செயலிகள் வாயிலாக ஆவணங்களைப் பதிவேற்றி, டிஜிட்டல் முறையில் கையொப்பமிட்ட சான்றிதழ்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் வாட்ஸ் அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம் என்று மெடா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}