பெண் என்பவள்

Jul 29, 2026,02:05 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


"அகிலத்திலுள்ள" தலைச்சிறந்த 

சொற்களின் கோர்வையானவள்


ஆதிசிவனின் 

அங்கத்தில் 

பாதியாகி அர்த்தநாரியானவள்


இல்லறவாழ்வில் இன்பதுன்பம் 

மறந்து இயந்திரமானவள்


ஈகையில்லாத அன்பில் 

ஈர்ப்பு விசையானவள்


உலகசாதனைகளும் நடத்தி 

ஆணுக்குப்பெண் நிகரானவள்


ஊனமென்ற வார்த்தையை 

வாழ்க்கையில் உடைத்தெறிந்தவள்




எட்டயப்புரத்தானின் 

ஏவலில் 

புதுமைப்

பெண்ணாணவள்


ஏட்டுக்கல்வியிலும் எட்டுத்திக்கும் 

புகழ்ப்பெற்று எடுத்துக்காட்டானவள்


ஐம்பெரும் காப்பியங்களில் 

அழியாத பாவையானவள்


ஒளிச்சுடராய் மண்ணுலகுக்கு 

வெளிச்சம் தந்தவள்


ஓயாத கடலலையாய் 

ஓய்வில்லாமல் ஓடுபவள்


ஒளவை,கண்ணகியென 

கர்ப்புநெறி காத்தவள்


அஃதே தாய்மையெனும் 

தனித்துவத்தையும் பெற்றவள்


தாயாய் , தாரமாய் 

தமக்கையாய்,

தோழியானவள் 


"தரணியை" தடம்

புரடவிடாமல் இயக்குபவள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்