பூமியில் புதைந்த பூலான்தேவி

Jul 08, 2026,04:22 PM IST
- டிலாணி ஸ்ரீதரன்

ஒடுக்கப்பட்ட 
சமுதாயத்தில்
உன்னத 
பிறப்பு

பிள்ளைப்
பருவத்திலே
திருமணப்
பிணைப்பு

கட்டியவனிடம்
கொடுமைகள்
பலவும்
அனுபவிப்பு

அவளின்
வாழ்க்கையும்
ஆடவர்கள்
பலரினால்
சிதைப்பு



இளம்
வயதிலே
மூர்க்கமாக 
தாக்கப்பட்டு
தவிப்பு

பெண்களைக்
கண்டாலே
கற்பழிக்கத்
தோணுமா?
மூர்கர்களின்
நினைப்பு

வேதனைகள்
தாங்கியே
விரக்தியாகி
சமூகத்தின்
விரோதமாக
உயிர்ப்பு

அவளைப்
போன்ற
அபலைகளை
நெருங்கும்
குற்றங்களும்
எதிர்ப்பு

உடனுக்குடன்
கொடியவர்களின்
தீயச்செயலும்
கருவருத்து
கிடைத்தது
தண்டிப்பு

கொள்ளைக்காரி
சமீக விரோதி
கொலையாளி
என்றே பட்டமளிப்பு

தீண்டத்தகாதவள்
என ஒதுக்கும்
சமூகம்
கற்பழிக்க
மட்டும்
தீண்டுவதும்
அருவருப்பு

வேடிக்கை
என்னவென்றால்
தெய்வமாக
வணங்க வேண்டியவர்களையும்
உடன் பிறப்புகளாக
பார்க்க வேண்டியவர்களையும்
வேதனைக்கு உட்படுத்தி
வேடிக்கை பார்க்கும்
சமுதாயமே வெட்கித்
தலைகுனிய வேண்டும்....

இவளும் ஒரு
 பெண்தானே
என்று நினைத்து
இழிவுப்படுத்த
எண்ணும்
கோழைகளே
கேவலமான 
பிறவியாகும்

புழுவாய்த்
துடித்து
பூகம்பமாக 
எழும்பிய
பூலான் தேவி
ஏன் வெட்கப்பட
வேண்டும்????

போராளியாகி
பேரொளிக்
கொண்ட
பேதையவள்
பெருமைக்குரியவளே.....

பெண்களின்
கற்புக்கு
குரல் கொடுத்து
கயவர்களை
வேரருத்த
வீர மங்கையான
அவளும் ஒரு
பெண் என்பதில்
பெருமைதான்!

இன்னும் சொல்லலாம்
சொல்லிலடங்காத
வேதனைகளை....
சொன்னால்
தீரப் போவதில்லை
சிலர் மனதில் அவள் மீதான
கெட்ட எண்ணங்கள்
மறையப் போவதுமில்லை..

அவளும் பெண்ணின்
அழகிய அவதரிப்பே
உணர்ந்தால் எல்லாம்
உயிரே...... !
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

THE LIGHT HOUSE.. ச.ப.அம்புஜாவின் கவிதைத் துளிகள்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்