- கலைவாணி கோபால்
திருவாய்மூர் சிவனை நேரடியாக தரிசனம் செய்து விட்டு வந்த இருவரும், அளவில்லா ஆனந்தம் கொண்டு.. சில நாட்களுக்கு பிறகு திருமறை காட்டுக்கு திரும்பினர். அங்கு, தங்கியிருந்த போது தான், பிள்ளையின் கால்கள் நடந்து தோய்கின்றன எனச் சொல்லி .. சோழ மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றி, சம்பந்த பிள்ளைக்கு பல்லக்கு கொடுக்கச் சொன்னார்.
சம்மந்தருக்கு ஏன் முத்து பல்லாக்கு பெருமான் கொடுக்கச் சொன்னார் என்பது பின்பு தான் புரிந்தது. ஏனெனில், திருமறைக்காடு என்பது பாண்டிய நாட்டுக்கு அருகில் உள்ள பகுதியாகும். அப்பரும், சம்பந்தரும் ,அங்கு தங்கியிருந்த செய்தி கேட்டு... சமணர் பிடியில் இருந்த பாண்டியநாட்டை காக்கும் பொருட்டு, அரசி மங்கையர்கரசியார் அவர்கள், தனது அமைச்சரான குலர்ச்சிறையாரை அனுப்பி , சம்பந்த பெருமானை, மதுரைக்கு வர கேட்டுக் கொண்டார்.
பொல்லாத குணம் உடைய சமணர்கள் சைவம் வளர்வதை தடுக்க ,எப்படிப்பட்ட தீங்கு செயலையும் செய்வார்கள் என, அஞ்சி சம்பந்தப் பிள்ளையை பாண்டியநாட்டுக்கு அனுப்ப மறுத்தார். அப்போது கிரகங்களின் சஞ்சாரமும் சரியில்லை அதனால் ,சம்பந்தப் பிள்ளையை பாண்டிய நாட்டுக்கு அனுப்புவதற்கு அப்பர் பெருமானுக்கு விருப்பம் இல்லை.
ஆனாலும், சம்பந்த பிள்ளை நாளும் கோளும் அடியார்க்கு ஏது என்று சொல்லி "கோளாறு பதிகம் "பாடி கிரகங்கள் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது. என, சொல்லி அவரிடம் ஆசி பெற்று, நீறு பூசி குலச்சிறையாரின் வேண்டுகோளின் படி , மதுரையம்பதி சென்றார்.

பின்பு ,அப்பர் பெருமான்.' பழையாறு' என்னும் சிவாலயம் சென்றார் .அங்கோ! சமணர்கள் கோவிலை உரு தெரியாமல், கருவறை அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டு இருந்தது. சமணர்களின் செயல்கள் அவ்வாறாக இருந்தது.
"தலையெல்லாம் பறிக்குஞ் சமண் கையரு"என்னும் பதிகம் அப்பர் பெருமான் பாடிய பின் ,சிவபெருமான் அவ்வூரின் மன்னன் கனவில் தோன்றி, சிவன் ஆலயம் பற்றிய குறிப்புகளை சொல்லி, மன்னனும் சிவபெருமான் சொன்ன வழியே ஆலயத்தை மீட்டு எடுத்து சமணர்களை விரட்டி அடித்தான். பழையாறு சிவாலயம் ஒருவாறாக அப்பர் சுவாமிகளின் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டது.
இங்கு இவ்வாறு நடக்க.... அங்கும், சம்பந்தப்பிள்ளை மதுரையம்பதியில் சமணர்களை விரட்டி அடித்து ,கூன் பாண்டியனுக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற நாமம் கொடுத்து சைவனாக்கி விட்டு, அப்பரைக் காண திருக்கடவூர் வந்தடைந்தார்.
ஆனால், அப்பர் திருப்பூந்துருத்தியில் இருப்பதாக தகவல்கள் கிடைத்தது. திருப்பூந்துருத்தி ஆலயம் சென்று அப்பர் எங்கே? என, தேடிய போது ,அப்பர் திருப்பூந்துருத்தியில் மக்களோடு, மக்களாக, சமணத்தை அழித்து சைவத்தை பரப்பிய திருஞானசம்பந்தரின் பல்லாக்கை தாங்கியபடியே கூடவே வந்து கொண்டிருந்தார். இந்த, தகவலை அறிந்த சம்பந்த பிள்ளையும், உடனே பல்லக்கை விட்டு இறங்கி அப்பரிடம் ஆசி பெற்றார். பின்பு இருவரும், தங்களுக்கு நடந்த அனுபவங்களை பரிமாறிக் கொண்டனர்.
பரிமாறிக் கொண்ட அனுபவங்களைக் கேட்ட பின் அப்பர் மதுரை நோக்கி செல்ல ஆவல் கொண்டார். சம்பந்த பிள்ளையும் தொண்டை நாடுசெல்ல ஆவல் கொண்டார்.
மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை
குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி
சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!
THE LIGHT HOUSE.. ச.ப.அம்புஜாவின் கவிதைத் துளிகள்!
வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!
{{comments.comment}}