டெல்லி: போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேர் டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படும் ரசாயன பொருட்களை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் ஆகும்.
இது தொடர்பான விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் மூளையாக செயல்பட்டது திமுகவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். கடத்தப்பட்ட இந்த போதைப் பொருட்களை இவர் ஆஸ்ரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவானார். விமான நிலையங்களில் தீவிர சோதனையும், லுக் அவுட் நோட்டிஸும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக் வீட்டில் தொடர் சோதனை நடத்தி அவருடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

மேலும் அவருக்கு வேறு எந்த அமைப்பினருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த ஆய்வில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். இந்த நிலையில், டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்கு இவரிடம் தொடர் விசாரணை நடத்திய போது பல தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் கூறினார். இதை அடுத்து இவரை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் இயக்குனர் அமீர் உட்பட மூவர் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆஜராகும் படி டெல்லி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர்,அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய மூவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.
என்னை எப்போது அழைத்தாலும் உண்மையை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். இறைவன் மிகப்பெரியவன் என சமீபத்தில் இயக்குனர் அமீர் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டது நினைவிருக்கலாம்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சீற்றத்தில் சிஸ்டர் நிர்மலா.. தினந்தோறும் தீ மிதிக்கும் சீதா.. (சீதா - 2)
நீள் ஆயுள்.. நிறை செல்வம்.. ஓங்கி வாழும் மெஞ்ஞானம்.. 10 சங்கல்பங்களைக் கைக் கொள்ளுங்கள்!
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி
{{comments.comment}}