சென்னை: விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் அவரது நடிப்பில் தேசிங்குராஜா 2 படம் வெளிவர உள்ளது. இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.எழில் இயக்கியுள்ளார்.
இயக்குனர் எஸ்.எழில் ஏற்கனவே துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை, பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்களாக குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும்.
இயக்குனர் எழில் படங்களில் இதமான காதல், அதிரும் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், என அனைத்து நிறைந்த படங்களாக இருக்கும். அப்படி இவர் இயக்கிய படங்களில் ஒன்றுதான் தேசிங்கு ராஜா. இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு விமல் நடித்த தேசிங்கு ராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை எழில் இயக்கி இருந்தார். தற்போது மீண்டும் தேசிங்கு ராஜா 2 படத்தையும் இயக்க உள்ளார்.

தேசிங்கு ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தேசிங்கு ராஜா 2 வில் விமல் மற்றும் எழில் கூட்டணியில் இப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விமலுக்கு அடுத்து இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். இப்படத்தை இன்ஃபினிடி கிரியேஷன் சார்பில் பி ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். ஆர் செல்வா ஒளிப்பதிவு செய்யகிறார்.
வித்யாசாகர் இசையமைக்கிறார். இயக்குனர் எழில் இயக்கிய படங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய படங்களில் காமெடியும் சற்று தூக்கலாகவே இருக்கும். அதுபோலவே தேசிங்கு ராஜா 2 படத்திலும் ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கின்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா, சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்ற பல காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.
இதில் பூஜிதா பொனாட மற்றும் ஹர்ஷிதா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள் வெவ்வேறு நோக்கத்துடன் வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றனர். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள்.. என்பதை படம் முழுக்க காமெடி கதையாக உருவாகி உள்ளது. தேசிங்கு ராஜா 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜாலியாக, சம்மர் ரிலீஸாக படம் தயாராகி வருகிறதாம்.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}