சென்னை: தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று இயக்குநர் வெற்றிமாறனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பேரரசு.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி இருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சீமானின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தமிழக அரசியலில் கடுமையான விவாதங்களை உருவாக்கியது. பல்வேறு தரப்பினர்களும் சீமானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார் என இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில் அளிக்கும் விதத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய வெற்றிமாறன் அவர்களே!
சீமான் அவர்கள்
பெரியாருக்கு எதிராக பேசவில்லை
பெரியார் பேசியதை சொல்கிறார்!
அவரைப் பற்றி அவதூறு பரப்பவில்லை,
அவரைப் பற்றிய உண்மையை சொல்கிறார்.
சீமான் அவர்கள் சொல்வது பொய்யென்றால்
அவர் சொல்வது பொய்யென்று சொல்லுங்கள்!
பொய்யென்று நிரூபியுங்கள்!
தமிழ் மொழியைப் பற்றி பெரியார் இப்படி எல்லாம் இழிவாக பேசவில்லை என்று சொல்லுங்கள்.
பெண்களின் உறவுகள் பற்றி இப்படி எல்லாம் பெரியார் அசிங்கமாக பேசவில்லை என்று சொல்லுங்கள்.
அது இருக்கட்டும்
சீமான் அவர்கள் பெரியாரைப் பற்றி எத்தனை விஷயங்களை பொதுவெளியில் வைக்கிறார்.
ஏன் வீரமணி அவர்களும் சுப.வீரபாண்டியன் அவர்களும் பதில் கூறாமல் பதுங்கி இருக்கிறார்.
பதில் கூற கடமைப்பட்டிருக்கும் திரு வீரமணி அவர்களே அமைதியாக இருக்கும் பொழுது நாம் ஏன் இதை பற்றி பேச வேண்டும்?
சீமான் பேசுவது அரசியல் ஆபத்து அல்ல, பெரியாரை வைத்து பொழப்பு நடத்தும் சில அமைப்புகளுக்கும், சில கட்சிகளுக்கும்தான் ஆபத்து என்று தெரிவித்துள்ளார் பேரரசு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}